வியாழன், 8 அக்டோபர், 2015

விசிக சாதி கட்சியா?

விசிக சாதி கட்சி?
வீர பறையர்களே! வீர பள்ளர்களே! வீர சக்கிலியர்களே! ஒன்றிணையுங்கள் என்று விசிக எப்போதாவது கூவி அழைத்ததா?
நாம் ஆண்ட சாதி, பேண்ட சாதி என சாதி மலத்தை கரைத்து வாயிலூற்றி போதை ஏற்றியதா?
சொந்த சாதிக்குள்ளேயே மணம் முடியுங்கள் என்று சாதி தூய்மை பேசியதா?
எந்த வகையில் விசிக சாதி கட்சி? தலித் மக்களுக்காக பாடுபடுவதாலா? சாதி ஒழிப்பு தான் உங்கள் நோக்கமெனில் நசுக்கப்படுபவனை நோக்கியல்லவா உங்கள் கரம் நீள வேண்டும்?
அதெப்படி நீ சாதியை ஒழிக்க சொல்லலாம்? சாதி ஒழிப்பை பேசினாலும் சாதி கட்சி தான், நீ வாயை மூடிகிட்டு சும்மா இரு, நாங்க ஏறி மிதிச்சுட்டே இருப்போம் ன்றது தான் உங்க சமூக நீதியா?
நடுநிலை என்பது கைகட்டி வேடிக்கை பார்ப்பது அல்ல. நியாயத்தின் பக்கம் நிற்பது, அநீதியை துணிவுடன் எதிர்ப்பது. ஆனால் இவையெதையும் செய்ய தயாராக இல்லை நீங்கள்.
உங்கள் நோக்கமெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக யாரும் குரல் கொடுக்க கூடாது, அவர்கள் இப்படியே சாதி அடிமைகளாகவே தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
அதனால் உங்களால் சமூக நீதியை வாய்கிழிய மேடைகளில் முழங்கிக்கொண்டே, சாதி ஒழிப்பை, சமத்துவத்தை, மனித சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு இயக்கத்தை சாதி முத்திரை குத்தி ஒடுக்கவும் முடிகிறது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக