ஞாயிறு, 2 நவம்பர், 2014

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் - பதில்

பசும்பொன் முத்துராமலிங்கம் குறித்த
பதிவுகளில் நண்பர் ஒருவர் சில
கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

கேள்வி 1 : (திருமாவளவன்
முத்துராமலிங்கத்தை வணங்குவது போல
ஒரு புகைப்படத்தை பகிர்ந்து )
திருமாவளவன்
தேவரை வணங்கியிருக்கிறார்.
அப்படியெனில் திருமாவளவன்
முட்டாளா?

கேள்வி 2 : தேவர் ஃபார்வர்டு பிளாக்
கட்சியின் முன்னாள் தலைவர். அவர்
திரு. இமானுவேலைக் கொன்றாரா?
கேள்வி 3: தேவர் மீது அக்காலத்தில்
ஏதேனும் FIR போடப்பட்டிருக்கிறதா?
அரசு ஆவணக்
குறிப்பை பற்றி பகிருங்கள்.

# இந்த கேள்விகள்
மூன்றிற்குமே பதிவிலேயே மிக
தெளிவான பதில் இருக்கிறது. மீண்டும்
மீண்டும் பதிவை நிதானமாக
படித்துவிட்டு கேள்வியெழுப்புங்கள்
என்று கூறிய பின்னும், தேவரைப்
பற்றி எப்படி இப்படி எழுதலாமென
சிலருக்கு கொதிப்புதான்
எழுகிறதே தவிர கொஞ்சமும்
மூளைக்கு வேலை தந்தால்
தேய்ந்துவிடுமோ என
அஞ்சுவதாகவே தெரிகிறது.

முதல் கேள்விக்கு வருவோம்.
திருமாவளவன் பற்றி பதிவில் எதுவும்
இல்லையென்பதால் அதற்கான
பதிலை மட்டும் இங்கே பகிரலாமென
நினைக்கிறேன். திருமாவளவன் தேவர்
படத்தை வணங்கியிருக்கிறாரே, அவர்
நல்லவரில்லை என
எப்படி சொல்கிறீர்கள் என்பதுதான்
கேள்வி

கேள்விக்கான பதில் எளிதிலும் எளிது.
திருமாவளவன் ஓர் அரசியல்வாதி.
அரசியல்வாதிகளின் நேர்மையும்
உண்மை தன்மையும் நாம் அறிந்த
ஒன்று தான். தேவரை வணங்கினால்
நாலு ஓட்டு விழுமெனில்
அவருக்கு நாப்பதாயிரம்
செலவு செய்து கும்பாபிஷேகமே செய்வார்கள்.

திருமாவளவன் ஆதரிக்கிறார்
என்பதற்காகவே ஒருவருக்கு அப்பழுக்கற்றவர்
என பட்டம் கட்டிவிட முடியாது.
இதே பதிவில் இன்னொரு நண்பர்
இதையொட்டிய
கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.
முத்துராமலிங்கம் இந்தளவிற்கு சாதிய
விஷத் தன்மை உடையவர் எனில்
இதெல்லாம் நம்முடைய
முதல்வருக்கு தெரியாதா? அவர்
ஆண்டுதோறும் தேவர்
பூஜைக்கு செல்கிறாரே, அவருக்கு தங்க
கவசமெல்லாம் அணிவிக்கிறாரே ,
அது ஏன் என்பது தான் கேள்வி.

அது ரஜினி படமென்று நினைக்கிறேன்.
வினு சக்கரவர்த்தி தேர்தலில்
நிற்கும்போது ரஜினி அவரை தன்
குப்பத்திற்கு அழைத்து வருவார்.
பன்றிகள் கூட
கூச்சப்படுமளவிற்கு தெருவெல்லாம்
சகதியும் சாக்கடையுமாக இருக்கும்.
அதிலும் ஓட்டு வேண்டுமென்பதற்காக
வேட்டியோடு எல்லோருக்கும்
கூழைக்கும்பிடு போட்டு வாக்களிக்க
சொல்லி கேட்பார் வினு சக்கரவர்த்தி.

ஆம், அரசியல்வாதிகளுக்கு ஓட்டு தான்
தேவையாயிருக்கும்போது
அவர்களுக்கு இப்படியான
"சாக்கடைகள்"
கண்ணுக்கு தெரிவதில்லை. சில
வருடங்களுக்கு முன்பு திருமாவளவனும்
ராமதாஸும்
கொஞ்சி குலாவி கூடியிருந்தது தெரியும்
தானே!

திருமாவளவனே ராமதாஸை அண்ணா அண்ணா என்று உச்சி முகர்ந்தது மட்டுமில்லாமல்
ராமதாஸுக்கு அம்பேத்கர் விருதையும்
கொடுத்திருக்கிறார் என்பதற்காக
ராமதாஸ் அப்பழுக்கற்றவராகிவிட
முடியுமா? இல்லை ராமதாஸின்
சாதி வெறியைத் தான்
விமர்சிக்கவே கூடாதா?

திருமாவளவன்
திமுகவோடு கூட்டணி அமைத்த
ஒரே காரணத்திற்காக கருணாநிதியின்
தப்பு தாளங்களுக்கெல்லாம்
ஒத்தூதினாரே, அதற்காக
கருணாநிதி நேர்மையானவராகிவிட
முடியுமா? அரசியல்வாதிகள்
ஓட்டு பிச்சை எடுக்க தேர்தல் களத்தில்
நிற்கும்போது பல
சமரசங்களை செய்து கொள்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இத்தகைய
சமரசங்களும்
சந்தர்ப்பவாதங்களுமே அவர்களின்
பிரதானக்கொள்கைகளாக
அமைந்துவிடுகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யும்
ஒரு அரசியல் கட்சி, திருமாவளவனும்
ஒரு அரசியல்வாதி என்றவகையில்
அவரும் இந்த மதிப்பீட்டிற்கு மிக்கவராக
இதுவரை தன்
செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவில்லை
என்பதே உண்மை.

மற்ற இரு கேள்விகளுக்கும்
பதிவிலேயே தெளிவான பதில்
இருக்கிறது. மீண்டும்
அதையே இங்கு மீள்பதிவிட
விருப்பமில்லை. காமராசர் போன்ற
தேசிய தலைவர்களை நாடார்
சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள்
அடைக்கிற நாம் தான்,
முத்துராமலிங்கம் என்ற
சாதி வெறியனை தேசிய தலைவராக
பிம்பத்தை கட்டியமைக்கிற
வேலையையும் செய்கிறோம்.

இமானுவேல்
அவர்களை முத்துராமலிங்கம்
நேரடியாக
குத்தி கொலை செய்யாதிருக்கலாம்.
ஆனால் அந்த கொலையின்
முழு சூத்திரதாரி முத்துராமலிங்கம்
தான். அவருடைய சாதிவெறியூட்டும்
பேச்சுகளே அந்த
கொலையை செய்யவைத்தன
என்பது எள்ளளவும் மறுக்கப்பட
முடியாத உண்மை.

முத்துராமலிங்கம்
பற்றி எழுதிக்கொண்டே போகையில்
வினவில் படித்த
( வினவு என்றாலே இங்கு எரிச்சலும்
குமைச்சலுமாய் இருக்கும்.
தேசத்துரோகிகளான வினவுக்காரர்கள்
எழுதுவதையெல்லாம்
படிப்பவனை போய் நம்முடைய ஃப்ரண்ட்
லிஸ்ட்டில் சேர்த்துவிட்டோமே என
விசனப்படுகிறவர்களும்
இருக்கத்தானே செய்கிறார்கள். அதற்காக
ஒன்றும் செய்ய முடியாது! )
மோடி குறித்த
கட்டுரை ஒன்று நினைவிற்கு வருகிறது.

மோடியின் தேர்தல்
வெற்றி குறித்து அலசிய
அக்கட்டுரையில் மோடி தனது தேர்தல்
பிரச்சாரங்களின் போது இந்து,
இந்துத்துவா என்ற
வார்த்தைகளை ஓரிடத்திலும்
பிரயோகிக்காமலேயே எவ்வாறு மக்கள்
திரளிடம் இந்துத்துவ உணர்வை எழுப்ப
முடிந்தது என்று விளக்கப்பட்டிருந்தது.
வளர்ச்சி, தேச பக்தி என்ற பிம்பத்துக்குள்
ஒளிந்தபடியே எவ்வாறு மதவெறியை மோடியால்
தூண்ட
முடிந்ததோ அப்படியே முத்துராமலிங்கமும்
தேசியம் பேசியபடியே மக்களுக்குள்
சாதி வன்மத்தைக் கிளறிவிட்டு அதில்
குளிர்காய்ந்தவர். மற்ற எந்த அரசியல்
தலைவருக்குமே இல்லாத
பெருமை ஒன்று முத்துராமலிங்கத்துக்­
கு மட்டுமே உண்டு.

அது முத்துராமலிங்கம்
பேசினாலே சாதிக் கலவரம்
தலை விரித்தாடுகிறது என்பதால்
அன்றைய அரசு அவர்
பிரச்சாரத்தின்போது பேசவேக்கூடாதென
அவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
உண்மைகளை இன்னும்
எத்தனை காலத்திற்குத்தான்
திரித்துக்கொண்டிருப்பீர்கள்?
வெளிச்சத்திற்கு வாருங்கள் தோழர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக