மூன்று பிரச்சனைகள் காரணம் ஒன்று தான்:
முதலில் தமிழ்நாட்டிலிருக்கும் ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடைசெய்ய வேண்டுமென்று இந்துத்துவ மாணவர் அமைப்பான பாஜக மாணவர் அமைப்பு (ஏ.பி.வி.பி) பிரச்சனையை கிளப்பியது.
அடுத்து ஹதராபாத் பல்கலைகழகத்தில் மரண தண்டனை வேண்டாமென்று கூட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்களை கல்லூரி விடுதியிலிருந்து நீக்கவேண்டுமென்று பிரச்சனையை கிளப்பியது.அதே இந்துத்துவ மாணவர் அமைப்பான (ஏ.பி.வி.பி)
இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திலும் இதே போன்று ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது ஏ.பி.வி.பி.
இப்படி புதுப்புது பிரச்சனைகளை பிஜேபியின் மாணவர் அமைப்பு திட்டமிட்டு பல்கலைகழகத்தில் கிளப்புவதின் நோக்கமென்ன?
மூன்று முக்கிய பிரச்சனைகளிலும் நேரடியாக சம்பந்தப்பட்ருக்கிற இந்துத்துவ மாணவர் அமைப்புகளை பற்றி எந்தவித விவாதங்களும் இல்லாமல் வெறுமன மரணதண்டனை, அப்சல் குரு அது இதுன்னு பிரச்சனைகுரியவர்களை காப்பற்றுவது ஏன்?
இதெல்லாம் பிஜெபி அரசின் கவனத்துக்கு வராமல் நடக்கும் நிகழ்வாகுமென்று ஸ்மிதி இராணி சொல்வதை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை.தனது இந்துத்துவத்தை பிரச்சனைகளின் மூலம் விரிவடையவைக்க ஆர்.எஸ்.எஸின் திட்டமே இந்த புதுப்புது பிரச்சனைகள்.
- Kondal Samy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக