காதலின் அழகு
உன் புன்னகையில்
உடைந்துதிரும் சொர்க்கமா?
உன் மௌனத்தில்
கரைந்தொழுகும் கவிதையா?
உன் ஸ்பரிசத்தில்
சிலிர்க்கின்ற சிறு மொட்டா?
உன் மோனத்தில்
நான் ரசிக்கும் இன்னிசையா?
எல்லாம் அழகுதான் -
இருந்த போதும்
என்னை என்னிடமும்
உன்னை உன்னிடமும்
இன்னும் உயிரோடு
வைத்திருக்கும்
நம் புரிதல் தான்
காதலின் பேரழகு!