வியாழன், 25 பிப்ரவரி, 2016

கருணாநிதி குடும்ப சொத்து மதிப்பு

கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..!
இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்கவேண்டாம்..

கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன்
10 ஆகஸ்ட் 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!
'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.
அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்துவிட்டார் என்கிறார்கள்.
''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

அருந்ததியின முதல் பெண் டாக்டர் இலக்கியா

அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி டம்ளரெல்லாம் கிடையாது. சிரட்டையில்தான் டீ ஊற்றுவார்கள். அங்கே பிற ஜாதியினர் முன்  கூனிக் குறுகி நிற்பார்.  கடைக்காரர் நீட்டும்  சிரட்டையை  பணிந்து வாங்கி,  தலையைக் கவிழ்ந்தபடி டீயை உறிஞ்சி குடிப்பார்.

சின்னப்பெத்தனின் மகன் சுந்தரம் அடுத்த தலைமுறை ஆயிற்றே. செருப்பு தைத்ததில்லை. பட்டி, தொட்டியெல்லாம் சைக்கிளில் சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்கிறார். அப்போது சம்சாரி வீட்டு பெண்கள் பழைய பொருட்களை விற்கும்போது “"ஏம்பா நீ குடியானவனா?'’என்று கேட்பார்கள். சுந்தரமோ "என்னம்மா நீங்க? பழைய பொருளை விக்கிறதுக்கு ஜாதியெல்லாம் கேட்கிறீங்க? நான் அருந்ததியர்ம்மா'’என்பார். அவ்வளவுதான்... முகத்தைச் சுளித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள் அந்தப் பெண்கள். சுந்தரத்தின் மனைவி கற்பகம் தனது மகள் இலக்கியாவை அழைத்துக் கொண்டு தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். உள்ளே சென்று வழிபடுவதற்கு அனுமதி இல்லாததால், கோவிலுக்கு வெளியே நின்று கும்பிட்டுவிட்டு வந்தார். அப்போது “""ஏம்மா நாம கோயிலுக்குள்ள போகக்கூடாது?''’என்று கேட்டாள் இலக்கியா. ""இங்கே எல்லாமே இப்படித் தான். தொணதொணன்னு உசிர எடுக்காத''’என்று சத்தம் போட்டார் கற்பகம். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சின்னஞ்சிறு வயது  இலக்கியாவுக்கு  "இதுதான் ஜாதிக்கொடுமை'’ என்பதை உணர முடியவில்லை. அப்போது அவள் மூன்றாம் வகுப்பு படித்தாள். அவளது பாட்டி சுப்பம்மாள் வீட்டு வேலை பார்த்துவந்தார். அவர் வேலை பார்த்த சம்சாரி வீட்டுக்குச் சென்று தன் பாட்டிக்கு ஒத்தாசையாக துணிகளை துவைத்தாள் இலக்கியா. பாத்திரங்களை யும் கழுவினாள். வேலையை முடித்து விட்டு பாட்டியும் பேத்தியும் கிளம்பும் போது, ""இந்தாங்கடி... டீ குடிச்சிட்டுப் போங்கடி...''’என்றார் அந்த சம்சாரி வீட்டு அம்மாள்.  டீ குடிப்பதற்கு ஆர்வமாகத்தான் இருந்தாள் இலக்கியா. கொட்டாங்கச்சியில் தனக்கு டீ தந்த போது முகம் வாடிப்போனாள். 

அதே சம்சாரி வீட்டு அம்மாள் இலக்கியாவிடம் இப்போது வாஞ்சையாகப் பேசுகிறார். “""என்னம்மா நல்லா இருக்கியா? வீட்டுக்குள்ள வாம்மா... டீ சாப் பிட்டு போம்மா''’என்று பாசம் காட்டுகிறார். வீட்டுக் குள் அழைத்துச் சென்று ஷோபாவில் அமர வைத்து கப்பில் டீயும் தருகிறார். ""இப்ப மட்டும் என் ஜாதி எங்கே போச்சு?''’’ என்று வியக்கிறார் இலக்கியா.

அப்படியென்றால்... ஜாதி, பேதமெல்லாம் ஒழிந்துவிட்டதா? குடிசைவாசியான இலக்கியாவுக்கு இந்த மரியாதை எப்படி கிடைத்தது? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடைதான். ஆம்! எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டராகிவிட்டார் இலக்கியா.

திண்டுக்கல் மாவட்டம் -ஒட்டன்சத்திரத்தில் இலக்கியாவின் தந்தை சுந்தரத்தைச் சந்தித்தோம்.

""அப்ப அவளுக்கு மூணு வயசுகூட இருக்காது. காணாம போயிட்டா.. நாங்களும் தேடி அலைஞ்சு தவிச்சு போனோம். "என்னம்மா இவளாவே பால்வாடிக்கு படிக்க வந்துட்டா'ன்னு டீச்சர்தான் கொண்டுவந்து விட்டுட்டுப் போனாங்க. படிக்கிறதுல நம்ம புள்ள ரொம்ப ஆர்வமா இருக்குன்னு அப்பவே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. பொறந்த ஜாதியால அவமானப்பட்டு வாழறது வெறுத்துப் போயி ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு நானும் ஆசைப்பட்டேன். வீட்ல வசதியில்ல, எட்டாம் வகுப்போட என் படிப்பு நின்னுப் போச்சு. மாட்டுத்தரகர் வேலை பார்த்ததுல நஷ்டப்பட்டு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போயிட்டேன். அப்புறம்தான் ஆதி தமிழர் பேரவை அதியமான் அய்யா பண்ணுன உதவியால, இந்த பழைய இரும்பு, பிளாஸ் டிக் வியாபாரம் பார்த்து பொழைக்க ஆரம் பிச்சேன். சின்ன வயசுல இருந்தே எம் மகளை பக்கத்துல உட்கார வச்சு அடிக்கடி சொல்லுவேன். ""கேவலப்பட்டு வாழறது எங்களோட போகட்டும். நல்லா படிச்சாத் தாம்மா இந்த ஊரு உலகம் உன்னை மதிக்கும்னு சொல்லுவேன்.'' அவளும் நாஞ் சொல்லுறத  கவனிச்சு தலையை தலையை ஆட்டுவா. என் பேச்சைக் கேட்டு நல்லா படிச்சா. இப்ப டாக்டராயிட்டா. என் கனவு நிறைவேறிருச்சு''’என்றார் பெருமிதத்தோடு.

முதலில் பேசத் தயங்கிய இலக்கியா பிறகு கொட்டித் தீர்த்துவிட்டார். ""நான்  டாக்டர் ஆனதுல எங்கப்பா அடைஞ்சிருக் கும் சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அவருக்கு புள்ளையா பொறந்து அவரு மனசை நிறைய வைக்க என்னால முடிஞ் சிருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந் தாலும், நான் ரொம்ப பேருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். மொதல்ல எங்க டீச்சர்ஸ் சிலம்புசெல்விக்கும் சாந்திக்கும், அப்புறம் கலைஞர் அய்யாவுக்கு.

2009-ல அவரு முதலமைச்சரா இருக்கும்போதுதான் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடுங்கிறது சட்டமாச்சு. அப்ப கலைஞர் அய்யா குறிப்பிட்டுச் சொன் னது என் மனசுல நல்லா பதிஞ்சு போச்சு. அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாக கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள்ன்னு அருந்ததிய மக்களைப் பத்தி உருக்கமா சொன்னாரு. எங்க மக்கள் புதிய உலகம்.. புரட்சியுகம் காண வேணும்னு சொல்லித்தான் உள் ஒதுக்கீடு சட்ட முன் வடிவை அவையில வச்சாரு. அப்பத்தான் எனக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துச்சு. 1085 மார்க் எடுத் திருந்தேன். மூணு சதவீத உள் ஒதுக்கீட்டுலதான்... தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரில எனக்கு சீட் கிடைச்சது. இந்த இட ஒதுக்கீடு  மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு டாக்டர் ஆயிருக்க முடியாது.

ஜாதி பார்க்காம உதவுற எத்தனையோ நல்லவங்களும் இருக்காங்க. நான் கவுன்சிலிங் போறதுக்காக தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணுங்கிறவர் அவரோட மனைவி நகையை அடகு வச்சு ரூ.10000-ஐ எங்கப்பாகிட்ட கொடுத்தாரு. ரூ.17000 தந்து காலேஜுல எனக்கு மொத ஃபீஸ் கட்டினது எம்.எல்.ஏ.சக்கரபாணி அய்யாதான். ஒட்டன்சத்திரத்துல கவர்மெண்ட் ஹாஸ்பிடல் திறக்கிறதுக்கு  வந்த மு.க.ஸ்டாலின் என்னைப் பத்தி கேள்விப்பட்டு படிப்புச் செலவுக்குன்னு அப்ப ரூ.10,000 கொடுத்தாரு. கஷ்டப்படற குடும்பத்துல இருந்து எம்.பி.பி.எஸ். படிக்க வந்திருக்கேன்னு எனக்கு அப்பப்ப டிரஸ்ஸு... செல்போனெல்லாம் வாங்கிக் கொடுத்தது எங்கூட படிச்ச ஃப்ரண்ட்ஸ்தான். ஃபைனல் இயர் படிக்கிறப்ப என்னால ஃபீஸ் கட்ட முடியல. சுபாஷிணி, பரமேஸ்வரி, பத்மா, சீதா, சாரதி, செம்பருத்தி, பிரகாஷ், இளவரசன், விஜின்னு ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் ஆளுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு போட்டு ஃபீஸ் கட்டினாங்க. இவங்கள்லாம் ஜாதியா பார்த்தாங்க? என் அனுபவத்துல சொல்லுறேன்... எந்த சமுதாயத்துல பிறந்தாலும் படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டா... இந்த ஊரும் உலகமும் ஜாதி பார்க்காம நம்மை மதிக்கத்தான் செய்யும்.

அதே நேரத்துல.. எங்க சமுதாய மக்கள் ஜாதிக் கொடுமையால் ஒடுக்கப்பட்டு... வேதனையில துடிச்சிக்கிட்டிருக்கிறது உண்மைதான். அவங்க படிச்சு முன்னேறணும்னா கல்வி ரொம்ப  ரொம்ப அவசியம். எனக்கு முதல்மாச சம்பளம் வரும்ல... அதுல  டிரஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சு, எங்க மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறதுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யணும்கிற திட்டம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருக்கு.

எல்லா மனுஷங்களும் ஒண்ணுதான்.. இதுல ஜாதியெல்லாம் எங்கேயிருந்து வந்து தொலைச்சுச்சோ? ஒரு டாக்டரா இருந்து எல்லா மக்களுக்கும் மருத்துவ சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்னோட வாழ்நாள் முழுதும் அதை நல்லபடியா செய்வேன்...''’என்றார் உறுதியான குரலில்.

பிறக்கும்பொழுதே ஒருவன் கீழ் ஜாதி, தொடக்கூடாதவன், எட்டி நிற்க வேண்டியவன், படிக்கக் கூடாதவன், கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாதவன், எல்லோருடனும் சமமாக உட்கார்ந்து சாப்பிட முடியாதவன், எல்லோருடனும் சமமாக திருமணம் செய்துகொள்ள முடியாதவன்... என்றெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சிந்தனை உடையவர்களாக, ஜாதிப் பற்றினை விட்டுவிட முடியாதவர்களாக பலரும் இருக்கிறார்கள். அதனால்தான், சமூக நீதிக்கான போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இலக்கியா போன்றவர்களோ  நம்பிக்கை நட்சத்திரங்களாக நம் கண் முன்னே மிளிர்கிறார்கள்-நக்கீரன் வார இதழ் 07.04.2015

ஜெய்பீம் - திரு. லெனின்

திசைகளில்
தீமூட்டுகிறது
ஜெய்பீம் முழக்கம்....

அடங்காவெறியோடு
ஆவேசம் கொண்டலைகின்றன
துருவேறிய சூலங்கள்...

ஆணியடிக்கப்பட்டப் பெட்டியில்
ஆவியடங்கி
அழுகிக் கொண்டிருக்கிறது
அந்த
அகண்டபாரதம்....

கடவாய் நக்கி
காட்டுக்கூச்சலிட்டு
ஜெய்...ஶ்ரீ...ம்
என்றதுகளின்
பிடரியை உலுக்குகிறது
அந்த
ஒற்றைச்சொல்...

பிழைத்திருக்க
கோவின் சாணமும்
கொழுத்தப் பசுவின் மூத்திரமும்
ஷேமகரமென
புக்ஷித்திருங்கள்....

காவியை
நீ லம்
சிகப்பு
நிர்மூலமாக்கும்...

ஜெய்பீம்
ஜெய்பீம்..

....லெனின்

தமிழகத்தை சீரழிக்கும் முப்பெரும் அபாயங்கள் - சேர்ந்த.சிவகுரு

இன்றையக் கண்ணோட்டம்-(258)
            *************************
#தமிழகத்தைச்_சீரழிக்கும்
             #முப்பெரும்_அபாயங்கள்

1.RSS &சங்கபரிவார்
2.ஜெயாவின் மாபியா கும்பல்
3.நாம் தமிழர் கட்சி.

ஏற்கெனவே இரண்டு அபாயத்தால் சின்னாபின்னாகிக் கொண்டிருந்த தமிழகம் இப்போது நாம் தமிழர் கட்சி என்கிற இனவாதக் கட்சியால் மக்கள்  மேலும் பிளவுபட்டு வர்க்க ஒற்றமை சீர் குலைகிறது.

எதிரிகளின் நோக்கமும் இதுதானே.

பெரியாருக்குப் பிறகு தைரியமாக நேர்மையாக பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்வதற்கு ஆளில்லாததாலும்

கம்யூனிஸ்ட்களின் பலவீனத்தாலும்

வலதுசாரிகள் 40ஆண்டுகளாக மெல்லமெல்ல நெருக்கி இப்போது வெளிப்படையாகவே இந்துமதவெறியைக் கக்குகிறார்கள்.

ஜாதியை,மதத்தை, பிற்போக்கு மூடக்கலாச்சாரத்தை திட்டமிட்டு பரப்பி மீண்டும் பார்ப்பனர்களின் பொற்காலத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்

இதை செயல்படுத்திக் கொண்டே அதன் மறைவில் ஏகாதிபத்தியத்தை நாட்டில் காலூன்ற வைப்பதும் தீவிரமாக நடக்கிறது.

அதே போல ஜாதியை இனவெறியை மூடநம்பிக்கையை தூண்டி விடுவதில் நாம்தமிழர் கட்சிக்கும் RSSக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

RSSகாரன் முஸ்லீமை விரட்டனும் என்கிறான் சீமான் கும்பலோ 'தமிழரல்லாத'மொழிச்சிறுபான்மையினரை விரட்டத் துடிக்கிறார்கள்.

அவர்கள் இல்லாத கற்பிதமான இந்துமதத்தின் அடிப்படையில் பாசிசத்தைக் கொண்டுவர முயல்கின்றனர்

இவர்களோ தமிழர் மதம்,ஆசீவகம், முப்பாட்டன் முருகனென காலாவதியான பிற்போக்கான கலாச்சாரத்கை மீட்க துவேசத்தைக் கிளப்புகிறார்கள்.

RSSகாரனோ முஸ்லீமை வந்தேறி என்கிறான் தமிழக RSS சீமான் கும்பலோ வடுக வந்தேறிகள் என்கிறார்கள்.

இந்துமதத்துக்குக் கட்டுபட்டு வாழ்வதாக இருந்தால் முஸ்லீம்கள் இந்தியாவிலிருக்கலாமென திமிர் பேச்சுப் பேசுகிறார்கள்.

இவர்களோ நீங்கள் வாழலாம்
நாங்கள்தான் ஆள்வோமென பாசிசத் தனமாகப் பேசுகிறார்கள்.

அதாவது இரண்டாந்தர குடிமக்களாக வாழப் பிச்சைச்சலுகை தருவார்களாம்
அதை சுயமரியாதை இல்லாமல் கேட்டு மற்றவர்கள் வாழ வேண்டுமாம்.

அவர்களும் கிராமப் பூசாரி மாநாடு நடத்தி பார்ப்பனீயமயமாக்கப் பார்க்கிறார்கள்.

இவர்களும் கிராமப் பூசாரி மாநாட்டை நடத்தி பிற்போக்கை வளர்க்கிறார்கள்.

எல்லா மதஇன வெறியர்களையும் போல் இவர்களும் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள்

இருவருமே பேசமுடியாவிட்டால் விவாதத்தை நிறுத்திவிட்டு கெட்ட வார்த்தையால் திட்டத் தொடங்குவார்கள்.

இருவருமே அதிகாரத்திலிருப்பவரை
அண்டிப் பிழைத்து வாழ்பவர்கள்.
காலை நக்கத்தயங்காதவர்கள்

இருவருமே சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள்
கலாச்சார குண்டர்கள்.

இருவருக்குமே பொருளாதார கொள்கை கிடையாது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ சமூகத்தைக் காப்பதுதான் இவர்களது பொருளாதாரக் கொள்கை.

இரண்டு பாசிசத்துக்குமே இரட்டை நாக்குதான். இரண்டிலுமே உள்கட்சி ஜனநாயகம் கிடையாது.

RSSவெள்ளை ஏகாதிபத்தியத்தின் வளர்ப்புநாய் காலனியாதிக்கத்தை காக்கும் கள்ள வாரிசுகள்.

நாம்தமிழர் கட்சியோ ரா & தமிழக உளவுத்துறையால் வளர்க்கப் படும் வளர்ப்பு நாய்கள்.

உளவுத்துறையின் பிரிவினை திட்டம் 2வகையாக இருக்கும்
அவர்கள் சம்மதத்துடன் திட்டமிட்டு நேரடியாக நிதியுதவியைப் பெற்று சதி செய்வது, (சுப்ரமணிய சாமி, RSS,NGO)

நமக்கே தெரியாமல் நம்மை வேறு ஆள்களை வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் ஒருகட்டத்தில் இவர்களுக்கு தெரியவந்தாலும் தெரியாதது மாதிரியே நடப்பார்கள்.

விடுதலைப்புலிகள், IS,தாலிபான்,
அண்ணாத்துரை, மாலிக், சிறீ சேனா,
பிரசண்டா, நாகாப்படை,
நாம் தமிழர் கட்சி இப்படி பல

ஆட்களை கொலை செய்வது, புற்றுநோய் கிருமி மூலம் ஆளைக் கொல்வது, அண்டை நாடுகளில் குண்டு வைப்பது, காஷ்மீர்,நாகா,மணீப்பூர் அசாமில் கருங்காலிகளை உருவாக்குவது, விபத்தின் மூலம் ஆளைக் கொல்வது என படுபயங்கரவாத அமைப்புதான் RAW என்கிற உளவு அமைப்பு.

CIA, RAW,மொசாத் இவர்கள் தலையீடில்லாத ஒரு செயலும் உலகத்திலும் கிடையாது இந்தியாவிலும் கிடையாது.

அது நாம் அறிந்தோ அறியாமலோ அவர்கள் நம்மை இயக்குவார்கள்

கார்ப்பரேட்டுகளின் காலனியாதிக்கம்,
அதை கூட்டிக்கொடுக்கும் பயங்கரவாத இந்திய அரசு, தமிழகத்தை அடிமைப்படுத்தும் இந்திய அரசும், சட்டங்களும், தமிழகத்தில் ஆதிக்க ஜாதி முதலாளிகளும்தான்
தமிழகத்தின் 90%மக்களுக்கு எதிரிகள்.

இதை எதிர்க்காமல்,இதை மாற்றாமல்
தமிழனை தமிழன் ஆண்டாலும் வேறு யார் ஆண்டாலும் விடியல் பிறக்கப் போவதில்லை.

நாம் தமிழர் கும்பலோ,சீமானோ இதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசுவது கிடையாது.

மாறாக மக்கள் விரோத அரசுக்கெதிராகத் திரளும் மக்களை ஜாதியால் மதத்தால் இனத்தால், மொழியால் பிரிக்க முயல்கின்றனர்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையை RSSகும்பலும், தமிழக RSSசீமான் கும்பலும் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.

இந்தியா இல்லாதபோது தமிழ்நாடு உருவாகாத போது 1000ஆண்டுகளாக தென்னிந்தியா முழுவதும் பரவலாக வாழ்ந்து வரும் மக்களை மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது அந்தந்த எல்லைக்குள் அவர்கள் மொழிச் சிறுபான்மையாகி விட்டனர்.

இப்படி தமிழர்களும் கேரளா, கர்நாடகா,ஆந்திராவில் மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.

அதை அந்தந்த மாநில அரசுகள் மெல்லமெல்ல தத்தமது தேசிய இனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக பாலக்காடு அட்டப்பாடி பகுதியில் 400கிராமங்களில் தமிழ்பேசும் ஆதிவாசிகளும் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர்
அவர்களை கேரள அரசு மலையாள மொழிக்கல்வி மூலம் அவர்களை மலையாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டனர்.

இங்கும் வீட்டில் கன்னடம் தெலுங்கு பேசி வந்த மக்கள் 3-வது தலைமுறையினர் தமிழ்வழிக்கல்வி மூலம் தெலுங்கு பேசுவதை மறந்து விட்டனர் இப்போது அவர்களை பிரிவினையைத் தூண்டுவதன் மூலம்
ஒற்றுமை சீர்குலைவது மட்டுமல்ல

இதன்பாதிப்பு நீண்டகாலத்துக்கிருக்கும்.
இலங்கையைப் போல உள்நாட்டுப் போரில் சிக்கி வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும்.

1500ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் தமிழர்களாகத்தான் இருந்தார்கள்

சமஸ்கிருதக் கலப்பால் உருத்திரிந்து புது மொழிகளாக உருவானது.

வெளிமாநிலத்தில் ,வெளிநாட்டில் "வந்தேறியாக"வாழும் தமிழர்கள் என்ன செய்வதெனக் கேட்டால் அவர்கள் அங்கு அடங்கி ஒதுங்கி வாழ வேண்டுமென்கிறார்கள் சீமான் கும்பல்

அதாவது இங்குள்ள 50லட்சம் பிறமொழி பேசுவோரை அடிமையாக்க
வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் வாழும் 2கோடி தமிழர்களை பலி கொடுக்கிறார்கள்.

இது 100 ஆண்டுகளானாலும் பிரச்சனைத் தீரப்போவதில்லை.

இவர்கள் "வடுகர்களை வெளியேறச் சொல்லவில்லையே"என்கிறார்கள்.
அடங்கி வாழு என்பது வெளியே போ என்பதைவிட வக்கிரம் பிடித்த நிலைபாடுதான்.

இவர்கள் "வெளியேறச் சொல்லாமல்"இருப்பதுகூட தற்காலிக தந்திரம்தான் .பெரியார் பிறந்த மண்ணாக இருப்பதால்தான் 
கட்சி வலிமையானால் மொழிச்சிறுபான்மையினரைத் தாக்கி விரட்ட முற்படுவார்கள். இது உறுதி.

பகையற்ற முரண்பாடுகளை பகைமுரண்பாடாக ஆக்கி பிரிவினையை வளர்ப்பதைத்தான் RSSம் தமிழக RSSசீமான் கும்பலும் செய்துவருகிறார்கள்.

தமிழர்களை அழிக்கும் பார்ப்பன சதியின் ஒரு பகுதியான ஜெயாவின் ஆட்சி விளங்குகிறது.

அரைடவுசர் போடாத RSSகாரி ஜெயாவும் அதை திறம்பட செய்து வருகிறார்.
கொள்ளையடிப்பது, தான்தோன்றித்தனமான அராஜக ஆட்சி மூலம் நாட்டை சீரழிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாவர்தான் இந்த பார்ப்பன ஜெயா.

அரசியல் மாற்றம்,சமத்துவம், சுதந்திரத்துக்காகப் போராடும் முற்போக்கு சக்திகள் இந்த 3கும்பலையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி தமிழக RSS.
சீமான் தமிழக பால்தாக்கரே
சீமான் தமிழக ராஜபக்சே.

RSS,பிஜேபி, சிவசேனா, அதிமுகவை கட்சியாகப் பார்க்கக்கூடாதெனச் சொல்லிவந்தோம் இப்போது நாம்தமிழர் கட்சியையும் சேர்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகள் ஒழிக்கப்பட வேண்டிய பாசிச சக்திகள்.

இனவகுப்பு போராட்டம்

தீண்டாமை பிரச்சினை என்பது இனவகுப்பு போராட்டமே ஆகும். இந்த இனப்போர் இந்துக்களுக்கும், தீண்டதகாதவர்களுக்கும் இடையே நடைபெறுவதாகும். இது ஒருவர் மற்றொருவருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி பற்றிய பிரச்சினை அல்ல, இது ஓர் இனம் மற்றொரு இனத்திற்கு எதிராக இழைத்துவரும் அநீதிபற்றியதாகும்.

   இந்த இனப்போர் ஓர் இனம் மற்றொரு இனத்தோடு எப்படி உறவுகொண்டிருக்கவேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. மற்றவர்களோடு நீங்களும் சமம் என்று சமத்துவத்தை கோரும்போதுதான் இப்போராட்டம் துவங்குகிறது.

பாபாசாகேப் Dr B.R அம்பேத்கர்